பதிவு செய்த நாள்
06
அக்
2021
04:10
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில்களில், பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இந்நிலையில் இன்று (அக்., 6), நீர்நிலைகளின் அருகில் உள்ள அனைத்து கோவில்களில், பக்தர்கள் அதிக அளவில் திரள வாய்ப்பு உள்ளது. அதனால், கூட்ட நெரிசலை தவிர்த்திடும் வகையில், அனைத்து கோவில்களிலும், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. வழக்கமான பூஜை வழிபாடுகள், கோவிலுக்குள் பழக்க வழக்கங்களின்படி, பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்தப்படும். சிறப்பு பூஜை வழிபாடுகள் சம்பந்தப்பட்ட கோவில்களின் இணையதளங்கள் வழியாக ஒளிபரப்பு செய்யப்படும். நீர்நிலைகளில் வழிபாடுகள் செய்வதற்கும் அனுமதியில்லை. கொரோனா, மூன்றாம் அலை பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இத்தகவலை, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.