சிவகாசி: சிவகாசியில் உள்ள கோயில்களில் மகாளய அமாவாசையை சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவகாசி சிவன் கோயிலில் அதிகாலை விஸ்வநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. முன்னோர்கள் நினைவாக கோயில் நுழைவு வாயில் மற்றும் சிவன் சன்னதி முன்பும் பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வணங்கினர். சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில், துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், முனியப்ப சாமி துர்க்கை அம்மன் கோயில் , ரிசர்வ்லைன் தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோயில், சின்ன கட்டம்பட்டி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.