மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் சத்ரு உபாதைகள் கடன் தொல்லைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் மார்கழி மாதம் அம்மாவாசை மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சநேய பெருமானுக்கு இக்கோவிலில் அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம் இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயப் பெருமானே வழிபட்டு தங்களது வேண்டுதல்களை முன்வைப்பார்கள் வேண்டுதல் பூர்த்தி அடைந்ததும் ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆன இன்று திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது தொடர்ந்து தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயப் பெருமானுக்கு பக்தர்கள் வடை துளசி வெற்றிலை ஆகியவற்றால் மாலைகள் செய்து சாட்சியும் குங்குமம் மற்றும் பழம் தேங்காய் கொண்டு அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டனர். ஆஞ்சநேயர் பெருமானுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனைகளை மாதவன் பட்டாச்சாரியார் செய்து வைத்தார்கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.