கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2021 09:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், பெரிய மாரியம்மன் கோயில்களில் நவராத்திரி திருவிழா நேற்று முதல் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:30 மணிக்கு ஆண்டாள் கோயிலில், வெள்ளிக்கிழமை குரடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சாகம்பரி அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளினார். பெரிய மாரியம்மன் கோயில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.