திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2021 09:10
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த, திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி பெருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாளின் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாட்டு நிகழ்ச்சி கோயிலில் நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.