ராமேஸ்வரம்: அமாவாசைக்கு ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க சாலையில் தடுப்பு வேலி அமைத்து தடை ஏற்படுத்தியதால், பக்தர்கள் அவதிப்பட்டனர்.
புரட்டாசி மகாளய அமாவாசையான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசிக்க, அக்னி தீர்த்த கடலில் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இருப்பினும் கோபுர தரிசனம் செய்ய நேற்று ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். ஆனால் கோயில் மேற்கு கோபுர பிரதான நுழைவு சாலையில் ஒரு கி. மீ., தூரத்தில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து பக்தர்களை தடுத்தனர். மேலும் அரசு பஸ், பள்ளி வேன், வெளியூர் வாகனத்தை ராமர் தீர்த்தம், ரயில்வே பீடர் ரோடு வழியாக போலீசார் திருப்பி விட்டதால் மாணவர்கள், மக்கள் நடந்து சென்று பெரிதும் அவதிப்பட்டனர்.