மேல்மலையனுாரில் பக்தர்கள் இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2021 02:10
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் அனுமதியின்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது.நேற்று காலை 4:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் பிரகாரத்தில் சிவ வாத்தியம், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.