பதிவு செய்த நாள்
08
அக்
2021
01:10
சென்னை: அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி பத்து நாள் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்திப்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இன்று (அக்.,8) காலை அய்யா திருநாம கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செங்கொடி, பதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வலம் வருவார். விழாவின் 15ம் தேதி இரவு முக்கிய நிகழ்வான சரவிளக்கு பணிவிடை, திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடைபெறுகிறது. 17ம் தேதி காலை 11 மணிக்கு திருத்தேர் உற்வசமும், இரவு அய்யா பூம்பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதலும் நடக்கிறது. தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது.