ஆழ்வார் குறிச்சி: ஆழ்வார்குறிச்சி தலை சாய்ந்த முப்புடாதி அம்மன் கோயில் கொலு உற்சவ விழா துவங்கியது. ஆழ்வார்குறிச்சியில் பக்தர்கள் ரிக்கை கேட்பதற்காக தலை சாய்ந்த நிலையில் முப்புடாதி அம்பாள் காட்சியளிக்கிறார். இங்கு நவராத்திரி கொலு உற்சவ விழா துவங்கியது. கொலு அமைக்கப்பட்டு அம்பாள் சிறப்புஅலங்காரத்தில் காட்சியளித்தலும், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அரசு விதிக்குட்பட்டு பூஜைகளை பக்தர்கள் சமூகவலைதளங்களில் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.