ஹாசன்: கொரோனா பீதியுள்ளதால், இம்முறையும் கூட ஹாசனாம்பிகாவை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பில்லை, என அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.
ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் கோபாலய்யா கூட்டம் நடத்தினார். பின் அவர் கூறியதாவது:அக்டோபர் 28 முதல் நவம்பர் 6 வரை ஹாசனாம்பிகா திருவிழா நடக்கவுள்ளது. கொரோனா பீதியால், இம்முறையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வி.வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகள், பூஜைகளை ஆன்லைன் மூலம் பக்தர்கள் காணலாம். ஹாசன் நகரின் பல இடங்களில் எல்.இ.டி., பெரிய திரைகள் பொருத்தப்படும். நேரடியாக ஹாசனாம்பிகாவை தரிசனம் செய்ய பொது மக்களுக்கு வாய்ப்பளித்தால் கொரோனா பரவும் என்பதால் திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.ஹாசனாம்பிகா தரிசன துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆதிசுஞ்சனகிரி மடத்தின் நிர்மலானந்தநாத சுவாமிகள் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.