திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நவராத்திரி கொலு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2021 07:10
திருப்புத்துார்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழாவை முன்னிட்டு கொலு அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நவராத்திரி உத்ஸவம் 10 நாட்கள் நடைபெறும். அக்.,6 ல் உத்ஸவம் துவங்கியது. தினசரி காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனைகள் நடைபெறுகிறது. இரவு 6:30 மணிக்கு உற்சவ அம்பாளுக்கு தீபாராதனை நடைபெறும். நேற்று வஞ்சுளவள்ளி அலங்காரத்திலும், இன்று ஸ்ரீ கூடலழகர், நாளை ஸ்ரீராமஅவதாரத்திலும் உற்சவ அம்பாள் அலங்காரத்தில் அருள்பாலிப்பார். உத்ஸவத்தை முன்னிட்டு கோயிலில் கொலு அலங்காரம் அமைக்கப்பட்டு அதில் உற்ஸவ அம்பாள் எழுந்தருளியுள்ளார்.