திருப்பதியில் அலிபிரியில் கோ மந்திர்: பசுவிற்கான சிறப்பு கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2021 08:10
திருப்பதி : திருமலை திருப்பதி கோவிலின் அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் கோ மந்திர் எனப்படும் பசுவிற்கான சிறப்பு கோயில் திறக்கப்படுகிறது.
திருமலை திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினரும்,தமிழகத்தை சேர்ந்தவருமான தொழிலதிபர் சேகர் ரெட்டி சுமார் பதினைந்து கோடி ரூபாய் செலவில் இந்த கோவிலைக் கட்டி நன்கொடையாக வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்..: நீண்ட நாட்களாக நான் திருமலை பெருமாள் பக்தன் அவர் என் வாழ்வில் தந்த ஏற்றத்திற்கும் மாற்றத்திற்கும் நான் செலுத்தும் சிறு காணிக்கைதான் இந்த கோ மந்திர். இந்த கோ மந்திர் எனப்படும் பசுவிற்கான கோவிலில் எப்போது ஏழு பசுக்கள் இருக்கும் பக்தர்கள் வந்து பசுவையும் பசுவுடன் கூடிய கண்ணனையும் வழிபாடு செய்யலாம். மேலும் கோ துலாபாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது துலாபாரத்தின் ஒரு பக்கம் பசு நிற்கவைக்கப்பட்டு மறுபக்கம் அதன் எடைக்கு நிகரான பொருட்களை பக்தர்கள் கோவிலுக்கு வணங்கலாம். பசுவின் முக்கியத்துவம் மற்றும் அதன் மகத்துவம் குறித்து அறிந்து கொள்ளும் வண்ணம் குறும்படம் ஓன்றும் இங்குள்ள சிறு அரங்கத்தில் பக்தர்கள் காட்சிக்கு ஒடிக்கொண்டு இருக்கும் அது குறித்த விளக்க கையேடும் கொடுக்கப்படும். கோ மந்திரில் உள்ள பசுவோடு கூடிய கிருஷ்ணன் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது இதே போல கோவில் பெரும்பாலும் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது இரவு விளக்குகள் மத்தியபிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது இதன் ராமம் இரவில் ஒளிரும் தன்மை கொண்டதாகும். மேற்கண்டவாறு சேகர் ரெட்டி கூறினார்.