திருவாடானை : கொரோனா ஊரடங்கால் நவராத்திரி விழாக்கள் களை இழந்தது.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.கோயில் உள்ளே கொலு அமைக்கப்பட்டு, கோயில் வாசலில் ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா ஊரடங்கால் சில ஆண்டுகளாக அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு களை இழந்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்கள் மூடப்பட்டிருப்பதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில்லை. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மட்டும் நடத்தபடுகிறது. கொரோனாவால் நவராத்திரி விழா களை இழந்துள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.