திருவாடானை : முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் புரட்டாசி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள், தீபாராதனை நடந்தது. முருகன் மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டு வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்தார். பக்தர்கள் கந்தசஷ்டிகவசம் போன்ற பக்தி பாடல்களை பாடினர்.