ஹிந்துக்களின் குடும்ப வழிபாட்டு முறைகளை சீர்குலைக்க நோக்கம்: வி.எச்.பி., குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2021 02:10
மதுரை : ஹிந்துக்களின் குடும்ப வழிபாட்டு முறைகளை சீர்குலைக்கும் நோக்கத்தில் கோயில்களில் வெள்ளி முதல் ஞாயிறு வரை தரிசனத்திற்கு அரசு தடை விதித்துள்ளது, என, மதுரையில் வி.எச்.பி., குற்றம் சாட்டியுள்ளது.
அதன் மாநில இணை பொது செயலாளர் சந்திரசேகரன் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று இருந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதித்தது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் பள்ளி, கல்லுாரிகள், தியேட்டர்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. ஆனால் மதவழிபாட்டு தலங்களை திறக்க கூடாது என்ற போர்வையில் கோயில்களை திறக்க அனுமதி மறுக்கிறது. அனைத்து நாட்களிலும் கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். கோயில் நகைகளை தங்ககட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும். தவறினால் வி.எச்.பி., சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.