பதிவு செய்த நாள்
14
அக்
2021
03:10
தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணியின், 30வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கல்யாணி என்ற பெண் யானை உள்ளது. கல்யாணி யானையின், 30வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி, காலை, கல்யாணி யானைக்கு, சிவப்பு பட்டு வஸ்திரம் அணிவித்து, நெற்றி பட்டம் கட்டப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து, பட்டீஸ்வரர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கல்யாணி யானைக்கு, இனிப்புகள் ஊட்டப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள உற்சவ மூர்த்திகள் சீதை,ராமர், லட்சுமணன்,அனுமன் சிறப்பு அலங்காரத்தில் உடுமலை திருப்பதி வேங்கடேசபெருமாள் கோவிலில் எழுந்தருளினர்.