பதிவு செய்த நாள்
15
அக்
2021
09:10
புதுச்சேரி: புதுச்சேரி தர்மசம்ரக் ஷண சமிதி சார்பில் நடந்து வரும், சத சண்டி ஹோமத்தில், 8ம் நாளான நேற்று அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். புதுச்சேரி, தர்மசம்ரக் ஷண சமிதி சார்பில், நவராத்திரியை முன்னிட்டு, 2வது ஆண்டாக இ.சி.ஆரில் உள்ள சங்கரவித்யாலயா பள்ளியில், கடந்த 7ம் தே தி முதல், சத சண்டி ஹோமம் நடந்து வருகிறது. 8ம் நாளான நேற்று, அம்மன் கல்வி, கலை, தொழில், வியாபாரம், அறிவு, ஞானம் ஆகிய அனைத்திற்கும் அதிபதியாக விளங்கி வரும் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 7:00 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கி, தேவி மஹாத்மியம் 13 அத்யாயங்கள் படிக்கப்பட்டு, 13 முறை ஆகுதிகள் செய்யப்பட்டது. இறுதியில் மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது. அதில் பட்டுப்புடவை, மற்றும் நுாற்றுக்கணக்கான மூலிகைப் பொருட்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அப்போது, திரளான பக்தர்கள் யாக அக்னியை மூன்று முறை வலம் வந்து வணங்கினர்.யாகத்தை , கீதாாம சாஸ்திரி வழிகாட்டுதலில், அசோக் சாஸ்திரி நடத்தினார். நேற்றைய நிகழ்ச்சியில் சிவசங்கர் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை லலிதா சஹஸ்ரநாம பாராயணம், அர்ச்சனை, வே த பாராயணம், மூலமந்திரஜபம், ஹோமம் நடைபெற்றது. நேற்றைய சிறப்பாக யோகினி பூஜை, அஷ்ட பைரவர் பலி பூஜை நடை பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.