பதிவு செய்த நாள்
16
அக்
2021
04:10
நத்தம், சாணார்பட்டி யூனியன் வி.மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கதிர் நரசிங்க பெருமாள் கோவில் பெருமாளுக்கு தாமரை, முல்லை, மல்லிகை,ஜாதிப்பூ, செவ்வந்தி, சம்பங்கி, ரோஸ், துளசி உள்ளிட்ட பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அர்ச்சனைகள் ஆராதனைகள் தீபாரதனை நடைபெற்றது. திமுக க.விஜயன் தெற்கு மாவட்ட கவுன்சிலர் அவர்கள் சார்பில், சக்கரை பொங்கல்,தயிர் சாதம்,தக்காளி சாதம் மற்றும் புளி சாதம் ஆகியவை தயாரிக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தில் 5000-ம் நபர்களுக்கும் மேல் சிறப்பு கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நரசிம்மன், ராஜசிம்மன் மற்றும் கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.