பதிவு செய்த நாள்
18
அக்
2021
02:10
அவிநாசி: கொரோனா ஊரடங்கு விதிமுறை தளர்வையடுத்து, தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடு நடத்தப்பட்டது; பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில் கூடி வழிபட, தடை விதிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவர்கள், ஞாயிறன்று, தேவாலயங்களில் நடக்கும் பிரார்த்தனையில் பங்கேற்பர். இந்த தடையால் கடந்த, சில மாதங்களாக கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடு நடத்தப்படவில்லை. இதற்கான தடையை அரசு நீக்கியுள்ள நிலையில், நேற்று, தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடு நடத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தேவாலயங்களில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். தேவாலயத்துக்குள் நுழையும் முன், அனைவருக்கும் சானிடைசர் மூலம் சுைகளை சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவிநாசி, சிந்தாமணி பகுதியில் உள்ள புனித தோமையார் தேவாலயத்தில், பங்கு குரு கென்னடி தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டது. சேவூர் புனித லுார்து அன்னை தேவாலயம் மற்றும் திருப்பூரில் உள்ள தேவாலயங்களிலும் திருப்பலி நடத்தப்பட்டது.