புதுச்சேரி ; திருச்செந்துார் முருகன் கோவிலில், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், நேற்று சுவாமி தரிசனம் செய்தார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மங்கலம் தொகுதியில் போட்டியிட்ட தேனீ ஜெயக்குமார் வெற்றி பெற்றார். தொடர்ந்து, அமைச்சராகவும் பதவி ஏற்றார்.தேர்தலின்போது வேண்டிக்கொண்டதை நிறைவேற்ற, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தார் சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேகம், பூஜைகளில் பங்கேற்றார்.