மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே மிக பழமையான கோவிலில் பருவமழை பெய்வதற்காக பாறையில் கஞ்சியை ஊற்றி சாப்பிடும் வித்தியாசமான வழிபாட்டில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம் தாலுகா சாமராயபட்டி யி ல் பாப்பம்பாறை உள்ளது. தரைமட்டத்தி லிருந்து பல அடி உயரத்தில் உள்ளஇந்தப் பாறை குன்றின்மீது கல்யாண விநாயகர், ஆதிகேசவபெருமாள்,சுப்பிரமணியர் திரு க்கோவில்கள் உள்ளன. நூறு ஆண்டுக ளை கடந்து பழமை வாய்ந்த இந்த கோவி லில் வித்தியாசமான வழிபாடுநடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில்
பருவமழை போதிய அளவு பெய்வதற்கா க கோவில் வளாகத்தில் திரளும் பக்தர் கள் கஞ்சி வழிபாடு நடத்துகின்றனர். அதாவது, கஞ்சிகாய்ச்சி சாமிக்கு படைய ல் இட்டு,வணங்குகின்றனர் இதற்குப் பி ன்பு,அந்த கஞ்சியை பாறையில் ஊற்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடு கின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறி யதாவது: "கஞ்சி சாப்பிடுவதற்கு இலை, தட்டம் எதுவும் பயன்படுத்துவது இல்லை. மழை வேண்டி நடக்கும் இந்த வழிபாடு பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிபெருமாளுக்கு உ கந்த நாளான புரட்டாசி கடைசி சனிக் கிழமையன்று நடத்தினோம் "என்றனர். இந்த வழிபாட்டின் இறுதியில் மடத்துக்கு ளம் பகுதியில் மழை பெய்தது குறிப்பிடத் தக்கது.