திண்டுக்கல் : சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டியில் பூஜாரிகள் பேரமைப்பு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் உலக நன்மை வேண்டி சிறப்பு பஜனை நடந்தது.மாநில இணைச் செயலர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை தலைவர் சரவணக்குமார், துணை செயலாளர் முனியப்பன், பொறுப்பாளர்கள், பூஜாரிகள், ஊர் நாட்டாமை, பொதுமக்கள் பங்கேற்றனர். இதில், ஊர் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது.