சிங்கம்புணரி: சிங்கம்புணரி சிறுவர் பூங்கா அருகில் உள்ள பழமையான முத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அக். 16ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முத்து விநாயகருக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை வழிபாடு நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், வடக்குத்தெரு பொதுமக்கள், சிங்கம்புணரி கிராம மக்கள் செய்திருந்தனர்.