திருப்பரங்குன்றம் : ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து அஸ்தர தேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆறுமுக சுவாமி முன்பு பூஜைகள் முடிந்து பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.பிரதோஷ பூஜைகள்: கோயில் கம்பத்தடி மண்டபத்தில் மெகா நந்தி, மலைக்குப்பின்புறம் பால்சுனை கண்ட சிவபெருமான், திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதர், பாண்டியன் கல்யாண விநாயகர் கோயில், காசி விஸ்வநாதர், கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன.