புதுச்சேரி : முருங்கப்பாக்கத்தில், வரும் 24ம் தேதி ராம பக்த ஆஞ்சநேயர் சிலை பிம்ப ஸ்தாபனம் நடைபெறுகிறது. முருங்கப்பாக்கத்தில் அமைந்துள்ள சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் சார்பில், வரும் 24ம் தேதி ராம பக்த ஆஞ்சநேயர் சிலை பிம்பஸ்தாபனம் செய்யப்பட உள்ளது.அன்று காலை 8:00 மணிக்கு பஞ்சகவ்யபிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது.10:00 மணிக்கு யந்த்ர ஸ்தாபனத்தை தொடர்ந்து, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில், ஆஞ்சநேயர் பிம்பஸ்தாபனம் நடக்கிறது.