காரைக்குடி: கல்லல் அருகே உள்ள அசிறுவயலில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முன்னதாக வீடுகளில் வளர்க்கப்ட்ட முளைப்பாரியை வழிபாடு செய்த பக்தர்கள் ஊர்வலமாக புலிக்குத்தி அம்மன் கோயில் கொண்டு சென்றனர். இதில் அ.சிறுவயல் ஊராட்சிக்கு அ.சிறுவயல், புளியங்குடிபட்டி வீராண்டிகரை,உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.