பதிவு செய்த நாள்
21
அக்
2021
12:10
சென்னை: தமிழகம் முழுதும் உள்ள 10 பிரசித்தி பெற்ற கோவில்களில், முதலுதவி மையம் அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சட்டசபை மானிய கோரிக்கையின்போது, பக்தர்கள் அதிகம் வரும் பிரசித்தி பெற்ற 10 கோவில்களில் முதலுதவி மையங்கள், 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதன்படி, பழநி தண்டாயுதபாணி, சமயபுரம் மாரியம்மன், திருச்செந்துார், மருதமலை, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, ஸ்ரீரங்கம் அரங்கநாதப் பெருமாள், சோளிங்கர் லட்சுமிநரசிம்மர், மேல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி ஆகிய 10 கோவில்களில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன.