பதிவு செய்த நாள்
21
அக்
2021
12:10
சூலூர்: சூலூர் வட்டார சிவாலயங்களில் நடந்த அன்னாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் வழிபட்டனர். ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, சூலூர் வட்டார சிவன் கோவில்களில் சிறப்பு அன்ன அலங்கார பூஜைகள் நடந்தன. சூலூர் சிவன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் உள்ள சிவபெருமான், சின்னியம்பாளையம் கணபதீஸ்வரர் கோவில், செலம்பராயம்பாளையம் அழகீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில்களில், சிவ பெருமானை, அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்கரித்து மகா தீபாராதனை நடந்தது. அலங்காரம் கலைக்கப்பட்டு, அன்னம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் வழிபட்டனர்.