பதிவு செய்த நாள்
21
அக்
2021
03:10
கரூர் : கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது .கல்யாண பசுபதீஸ்வர்ர் என்கின்ற ஆநிலையப்பர், திருநாகேஸ்வரர், காரியமாலீஸ்வரர் அன்னத்தினால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவருக்கு நடைபெற்ற அன்னாபிஷேகத்தினை தொடர்ந்து இங்குள்ள காரியமாலீஸ்வரர், திருநாகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கும் அன்னாபிஷேக நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் அன்னத்தினால் அலங்கரிக்கப்பட்ட ஈஸ்வரன்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும், அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்பது இன்றும் ஐதீகமாக கூறப்படுகின்றதால், பக்தர்கள் பெருமளவில் கோயிலில் குவிந்து அன்னத்தினால் அலங்காரம் செய்யப்பட்ட ஈஸ்வரனை தரிசித்து கடவுள் அருள் பெற்றனர். மேலும், இதனை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் ஆராதனைகள் நடைபெறும்.
பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் அன்னாபிஷேக அலங்காரம் பிரிக்கப்பெற்று, சிவலிங்கத் திருமேனிமேல் சார்த்தப்பெற்ற அன்னத்தையும், காய்கறிகளையும், வடைமாலையையும் அர்ச்சகர் தனது தலைமேல் கூடையில் சுமந்து கொண்டு தீவட்டி, மேளதாளத்துடன், பக்தர்கள் சிவபுராணம் பாடிய வண்ணம் அல்லது அரஹர, சிவசிவ என நாமம் சொல்லிய வண்ணம் அருகில் உள்ள ஓடும் நீர் நிலைகளிலோ அல்லது ஆலயத் திருக்குளத்திலோ சென்று அதனை நீரில் கரைத்து தீபாராதனை செய்வார்கள். இதன் மூலம் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங் களுக்கும் கூட இறைவன் படியளப்பதாக ஐதீகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றியுள்ள அன்னத்தை தயிர் சாதமாக்கிப் பிரசாதமாக வழங்குவார்கள் குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டுவோர் இந்த அன்னத்தை உண்பதன் மூலம் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை. அன்னாபிஷேகம் செய்வதால் நல்ல மழை பெய்து நல்ல முறையில் விவசாயம் நடைபெறும் எனவும், உணவுப் பஞ்சம் ஏற்படாது எனவும் வேதங்கள் தெரிவிக்கின்றன.