Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துர்க்கையம்மன் கோவிலில் உலக நலன் ... தேனி வீரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு தேனி வீரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி வேதபுரி ஆஸ்ரமத்தில் ரூ 2.90 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருட்டு
எழுத்தின் அளவு:
தேனி வேதபுரி ஆஸ்ரமத்தில் ரூ 2.90 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருட்டு

பதிவு செய்த நாள்

27 அக்
2021
11:10

தேனி: தேனி வேதபுரி சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமத்தில் 2.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏழு ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. திருடர்கள் விட்டுச் சென்ற இரண்டு சிலைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

தேனி அரண்மனைப்புதுார் வயல்பட்டி ரோட்டில் வேதபுரி ஸ்ரீ சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமம் உள்ளது. இதன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தட்சிணாமூர்த்தி கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாயுமானவர் 1 அடி, மாணிக்கவாசகர் 1.5 அடி ஐம்பொன் சிலைகள் 2004ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தலா முக்கால் அடி உயரமுள்ள வேதவியாசர், ஸநகர், ஸநாதனர், ஸனந்தர், ஸாந்தக்குமாரர், அரை அடி உயரமுள்ள நந்திகேஸ்வரர், கால் அடி உயரமுள்ள பலிபீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஆஸ்ரமத்திற்கு அருகே உள்ள வனத்துறை நாற்றாங்கால் பண்ணை வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து, மூலவர் தட்சிணாமூர்த்தி கோவில் பின்புற சுவரில் உள்ள கண்ணாடியை உடைத்து, அங்கிருந்த உண்டியலுடன் ஐம்பொன் சிலைகளை திருடி சென்றனர். இது குறித்த புகார்படி தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே ஆய்வு செய்தார். திருடர்களை பிடிக்க இரு தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். நாற்றாங்கால் பண்ணையில் திருடர்கள் விட்டு சென்ற வேதவியாசர், பலிபீடம் உட்பட இரு சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசாரும் விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar