விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஹாசனாம்பா தேவி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2021 11:10
ஹாசன்: ஹாசன் டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சித்தேஷ்வரர் சாமி கோவிலும் உள்ளது. சித்தேஷ்வரர் கோவிலில் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஹாசனாம்பா கோவில் கருவறை தீபாவளியை ஓட்டி ஆண்டுக்கு ஒரு முறை திறந்து 9 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஹாசனாம்பா தேவி கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் விஸ்வரூப தரிசனத்தில் தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.