Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மகரம் :  செல்வ வளம் பெருகும் மகரம் : செல்வ வளம் பெருகும் மீனம் : பொறுத்தார் பூமி ஆள்வார் மீனம் : பொறுத்தார் பூமி ஆள்வார்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பம் : குருபலம் உண்டாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2021
16:10


அவிட்டம் 3, 4ம் பாதம்: சீறுவோர்ச் சீறு

லாபாதிபதியான குரு உங்கள் ஜென்ம ராசியில் வந்து அமர உள்ளது நன்மையைத் தரும். கடந்த ஒரு வருட காலமாக கண்டு வந்த தடைகள் விலகும். ஜென்ம குரு சற்று அலைச்சலைத் தந்தாலும் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடிவடையும். ஏழரைச்சனியின் தாக்கம் குறைவதாக உணர்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். இதுநாள் வரை எதிரியாக எண்ணியவர்கள் உண்மையைப் புரிந்துகொண்டு உங்களை நாடி வருவார்கள். சனியை ராசியாதிபதி ஆகவும், செவ்வாயை நட்சத்திர அதிபதியாகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு ஜென்ம குருவின் காலத்தில் மனக்குழப்பம் உண்டாவதைத் தவிர்க்க இயலாது. சாதுக்கள், சந்யாசிகள், குருமகான்களை தரிசிப்பதன் மூலம் மனக்குழப்பம் நீங்கும்.

நிதி : தன ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டின் அதிபதி குரு ஜென்ம ராசிக்குள் வருவதால் வரும் ஐந்து மாத காலமும் சிறப்பான பொருள்வரவினைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சேமிப்பு உயர்வடையும். சொத்துக்கள், நகை, ஆபரணங்கள் சேரும். புதிதாக நிலம், மனை வாங்க நினைப்போருக்கு கால நேரம் கூடி வரும். கொடுக்கல், வாங்கல் சீராக செல்லும். ஒரு சிலருக்கு குலுக்கல் முறையில் பரிசு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தான தருமங்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள்.

குடும்பம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணி நிமித்தம் வெளிநாடு சென்ற பிள்ளைகள் பெற்றோரை வந்து சந்திப்பதற்கான வாய்ப்பு உண்டு. சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான நேரம் கூடி வரும். குடும்பத்தினர் மத்தியில் இருந்து வந்த சலசலப்புகள் அகன்று ஒற்றுமையுணர்வு அதிகரிக்கும். உறவினர்களின் வருகை குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கூட்டும். தம்பதியருக்குள் இணக்கம் அதிகரிக்கும்.

கல்வி : மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதில் சிறந்து விளங்குவார்கள். ஆன்லைன் வகுப்பினில் பாடங்கள் புரியாமல் சிரமப்பட்டவர்கள் தற்போது ஆசிரியரின் துணையுடன் தெளிவு பெறுவார்கள். பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் முன்னிலை வகிப்பார்கள். குறிப்பாக சதுரங்கம் போன்ற மூளைக்கு வேலை தரும் போட்டிகளில் சிறப்பான வெற்றியைக் காண்பீர்கள். இயற்பியல், கணிதவியல், ஆசிரியர் பயிற்சி, கல்வித்துறை, சட்டம் சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.

பெண்கள் : குடும்ப விவகாரங்களில் உங்கள் கருத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறும். இயற்கையில் வேகம் நிறைந்த நீங்கள் பேசும் வார்த்தைகளில் சற்றே கடுமை வெளிப்பட்டாலும் அதிலுள்ள உண்மையை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். வீட்டு விசேஷங்களில் தலைமை பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்திக் காட்டுவீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாய் அமையும்.

உடல்நிலை : சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளால் உடல்நிலை சற்றே பாதிப்பிற்குள்ளாகலாம். உணவுப் பழக்க வழக்கங்களில் கண்டிப்பாக கட்டுப்பாடு தேவை. எண்ணெய் பலகாரங்கள், இனிப்பு வகைகளை அறவே தவிர்ப்பது நல்லது. கல்லீரல், கணையம், பித்தப்பை சார்ந்த பிரச்னைகளை உடனுக்குடன் கவனிக்க வேண்டியது அவசியம். ஒரு சிலர் மஞ்சள் காமாலை நோய்க்கு உள்ளாகும் வாய்ப்புண்டு.

தொழில் : சுயதொழில் செய்பவர்கள் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். அலைச்சல் என்பது அதிகமாக இருந்தாலும் எதிர்பார்க்கும் லாபம் வருவதில் எந்த தடையும் இருக்காது. கூட்டுத்தொழில் நல்ல லாபத்தினைத் தரும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், கலைத்துறையினர், திரைப்படக் கலைஞர்கள், அனிமேஷன் துறையைச் சேர்ந்தவர்கள், அழகுக் கலை நிபுணர்கள், ஓட்டல் பணியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், வேத விற்பன்னர்கள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காண்பார்கள். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேர்ந்தாலும் அலுவல் பணிகளில் முத்திரை பதிப்பார்கள். குரு ஜென்மத்தில் அமர்ந்து தொழில் முறையில் நிறைய மறக்க முடியாத அனுபவ பாடங்களைக் கற்றுத் தருவார்.
பரிகாரம் : வியாழன் தோறும் காஞ்சி மஹா பெரியவரை வணங்கி வாருங்கள்..
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
     இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

சதயம்: சூரரைப் போற்று

ராசி அதிபதி சனி ஆட்சி பலத்துடனும் நட்சத்திர அதிபதி ராகு நீச பலத்துடனும் இருக்கும் நேரத்தில் காண உள்ள இந்த குருப்பெயர்ச்சியின் காலம் உங்களுக்கு சாதகமான பலனைத் தருகிறது. வாக்குவன்மை கூடும். உங்களுடைய கருத்துக்கள் நல்லோர்தம் சபைதனில் அரங்கேறும். இத்தனை நாட்களாக உங்கள் வார்த்தைகளை புறந்தள்ளியவர்கள் உங்கள் வார்த்தைகளின் உண்மையான வலிமையை அறிந்து வியப்பார்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். ஜென்ம குரு லேசான மனக்குழப்பத்தையும் சற்று அலைச்சலையும் தருவார் என்றாலும் நீங்கள் எதிர்பார்க்கும் பலனையும் பெற்றுத் தருவார். குருபலம் இருப்பதால் குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் இந்த நேரத்தில் நடைபெறும். வறட்டு பிடிவாத குணத்தினைத் துறந்து சரியான இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை கூடும்.

நிதி : நிதிநிலை சீராக இருந்து வரும். நீண்ட நாட்களாக விற்க முயற்சித்து தடைபட்டு வந்த சொத்து ஒன்று இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு விற்கும். பழைய சொத்தினை விற்று புதிய சொத்தாக உருமாற்றம் செய்வீர்கள். சேமிப்பு உயர்வடையும். பிள்ளைகளின் வாழ்வினில் நடக்க உள்ள சுபநிகழ்வுகளுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். செலவுகள் கூடினாலும் வரவு நிலையும் நன்றாகவே உள்ளது.

குடும்பம் : குடும்பத்தில் ஒற்றுமையுணர்வு கூடும். பணிநிமித்தம் ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் குடும்பத்தினர் யாவரும் ஒன்றிணையும் வாய்ப்புண்டு. உறவினர்களால் கலகம் உண்டாகும் நேரத்தில் உண்மையுணர்ந்து அமைதி காப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக நடக்கும் வாய்ப்பு உண்டு. உங்களுக்கு துரோகம் செய்ய நினைப்போரின் மனதையும் உங்கள் நடத்தையால் மாற்ற முயற்சிப்பீர்கள்.
 
கல்வி : மாணவர்களைப் பொறுத்த வரை குருவின் துணை சிறப்பாக உள்ளது. ஞாபகமறதி முற்றிலும் காணாமல் போகும். பாடங்களை வேகமாகப் படித்து முடித்துவிடுவீர்கள். அதே நேரத்தில் அவசரத்தை கைவிட்டு கேட்கப்படும் கேள்வியினை சரியாகப் புரிந்துகொண்டு சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுத வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் துணையோடு தொழில்முறைக் கல்வியில் முதன்மை பெறுவீர்கள். பிராக்ட்டிகல் வகுப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

பெண்கள் : தோழியர் வழியில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கணவரின் துணைகொண்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குடும்பப் பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள். தங்க நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள் வாங்குவதில் ஆர்வம் கொள்வீர்கள். நவீன வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதோடு அவற்றின் உபயோகம் குறித்து தோழியர் மத்தியிலும் விவரிப்பீர்கள். குடும்ப விசேஷங்களில் உறவினர்களை அதிகம் நம்பாது தனித்து செயல்படுவீர்கள்.

உடல்நிலை:  காது, மூக்கு, தொண்டைப் பகுதி, கழுத்து, தோள்பட்டை, மேல்மார்பு ஆகிய பகுதிகளில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். ஒரு சிலருக்கு உடலின் மேற்தோலில் குறைபாடு தோன்றலாம். அதிகப்படியான டென்ஷனின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொழில் : பணிரீதியாக அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி இருந்தாலும் உங்களுக்கான பணியை பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர் மற்றும் உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் உங்களின் செயல் வேகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். தனித்து செயல்படாமல் குழுவாக செயல்பட்டு போட்டியில் வெற்றி காண்பீர்கள். சுயதொழிலில் குளிர்பான பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர், பொன், வெள்ளி போன்ற ஆபரணத் தொழில் செய்பவர்கள், ஜவுளி, வாசனாதி திரவியங்கள், பேன்சி பொருட்கள் விற்பனையாளர்கள், வங்கி, இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்டுகள் ஆகியோர் சிறப்பான லாபத்தினைக் காண்பார்கள். அலைச்சல் கூடினாலும் லாபம் கிட்டும்.
பரிகாரம் : சங்கர நாராயணரை வணங்கி வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
     அதனை அவன்கண் விடல்.

பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்:  கூடித் தொழில் செய்

ஜென்ம குரு உங்கள் மனக்குழப்பத்தை அதிகரிக்கச் செய்வார். எளிதில் முடிய வேண்டிய காரியத்தை தவறான புரிதலின் காரணமாக சிரமப்படு செய்து முடிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். இதனைத் தவிர்க்க உடனிருப்போரை நம்ப வேண்டியது அவசியம் ஆகிறது. சனியை ராசியாதிபதியாகவும் குருவை நட்சத்திர அதிபதியாகவும் கொண்டிருக்கும் நீங்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டத்தினையும் புரிந்துகொள்ள வேண்டும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பீர்கள். அதே நேரத்தில் பேச வேண்டிய தருணங்களில் அவசியம் பேசியே ஆக வேண்டும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு வருந்துவதால் உடல்நிலை கெடுவதோடு நாம் நினைத்த வேலையும் முடியாது. உங்களது நலம் விரும்புவோரை அடையாளம் கண்டு அவர்களோடு இணைந்து செயல்படுவதன் மூலம் எடுத்த காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக நடக்கக் காண்பீர்கள்.

நிதி : நிதி நிலை சீரடையும். இதுநாள் வரை தடைபட்டு வந்த பொருள்வரவு மெல்ல வளர்ச்சி காணும். வெளியில் நிலுவையில் உள்ள தொகைகள் வசூலாகும். சிறுசேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு.  லாபாதிபதியான குரு ஜென்ம ராசியில் இடம் பெறும் இந்த நேரத்தில் உழைத்து சம்பாதிக்கும் பணம் கையில் நிற்கும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சார்ந்த கடனுதவி கிட்டும். கடன்பிரச்னைகள் கட்டுக்குள் இருந்து வரும்.

குடும்பம் : வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் இருந்து வந்த விரிசல்கள் காணாமல் போகும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்வீர்கள். பெற்றோர்கள், உடன்பிறந்தோர் என எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து பேசுவதில் தனி இன்பம் காண்பீர்கள். தம்பதியருக்குள் இணக்கம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தைக் காண்பீர்கள். சலசலப்புகள் அகன்று கலகலப்பான சூழல் உருவாகும் நேரமிது.

கல்வி : மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை விட நேரடி வகுப்புகளில் அதிக நாட்டம் கொள்வார்கள். நண்பர்களுடன் இணைந்து படிப்பதில் ஈடுபாடு உண்டாகும். நேர்மையான வழியில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டீர்களேயானால் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது நிச்சயம். சட்டம் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி, அக்கவுண்டன்சி, காமர்ஸ், கணிதம் ஆகிய துறைகளில் உள்ள மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : நினைத்ததை உடனுக்குடன் சாதிக்க நினைத்து வேகமாக செயல்படுவீர்கள். பெரியவர்கள் சொல்லும் ஆலோசனைகள் உங்கள் வெற்றியை உறுதி செய்யும். வீட்டினில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை சேர்க்க அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நீங்கள் எண்ணிய காரியங்கள் டிசம்பர் மாத இறுதியில் நிறைவேறும். கணவரின் ஆலோசனையின்படி நடப்பது நன்மை தரும்.

உடல்நிலை : உணவுப் பழக்கத்தில் நிலவும் கட்டுப்பாடின்மையால் அவ்வப்போது உடல்நிலையில் பிரச்னை காண்பீர்கள். ஒரு சிலருக்கு உடல் எடை கூடும். கொழுப்பினை குறைப்பதாக நினைத்துக்கொண்டு நீங்களாக கடைபிடிக்கும் உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் உடலில் அசதியைத் தோற்றுவிக்கும். இதனால் உங்களையும் அறியாமல் மற்றவர்கள் மேல் வீணாக எரிச்சல் கொள்வீர்கள். வாயுப்பிடிப்பு, அலர்ஜி. தொற்றுவியாதி ஆகியவற்றிற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு.
 
தொழில் : 12ல் அமர்ந்திருக்கும் சனி தொழில் ரீதியாக நீங்கள் வேகமாக செயல்படுவதற்கு தடைக்கற்களை உண்டாக்குவார். ஆயினும் ஜென்ம ராசியில் குரு அமர்ந்து வழிநடத்துவதால் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள். பல் மருத்துவர்கள், எலும்புமுறிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சாப்ட்வேர், சினிமா மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள். சமையல் கலைஞர்கள், வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள். வங்கி, இன்ஷ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை ஆகியவை சார்ந்த பணியாளர்கள் இதுநாள்வரை கண்டுவந்த சிரமம் குறைந்து உற்சாகத்துடன் செயல்படுவார்கள். தொழிலதிபர்கள் தொலைநோக்கு பார்வையுடன் எதிர்கால வளர்ச்சிக்காக இப்போதே தொழில்முறையில் புதியமாற்றம் கொண்டுவர திட்டமிடுவார்கள். உழைப்பிற்கான ஊதியம் கண்டிப்பாகக் கிடைக்கும்.
பரிகாரம் : ஆதிபராசக்தி அன்னையை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
     அருவினையும் மாண்டது அமைச்சு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பட்டனப்பிரவேச விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் ... மேலும்
 
temple
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவத்தில் நேற்று இரவு பெருமாள் ... மேலும்
 
temple
பழநி: பழநியில் விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பழநியில் விடுமுறை நாளை ... மேலும்
 
temple
கமுதி: கமுதி காமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மே ... மேலும்
 
temple
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.