பதிவு செய்த நாள்
06
நவ
2021
12:11
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 2ம் நாள் விழாவில் ஏராளமானோர் கந்தசஷ்டி கவசம் படித்தனர்.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் சுவாமி, காளஹஸ்தீஸ்வரர் கோயில், வடுகபட்டி வள்ளி தெய்வசேனா சமேத செந்தில்முருகன் கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார-திருக்கல்யாண திருவிழா துவங்கியது. நவ., 10 வரை ஏழு நாட்கள் திருவிழா நடக்கிறது. நேற்று 2ம் நாளில் காலையில் பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிேஷகம், ஆராதனை நடந்தது. மூலவர் பாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலையில் உற்சவர்களான பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. கோயிலில் பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் பாடினர்.