Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஞானானந்த சுவாமிகள் ஜெயந்தி விழா வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா: சூரபத்மனை வதம் செய்த சுவாமி வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கந்த சஷ்டி விழா: சூரசம்ஹாரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பழநியில் கந்த சஷ்டி விழா: சூரசம்ஹாரம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 நவ
2021
07:11

பழநி: பழநியில் கந்த சஷ்டி விழாவில் நான்கு சூரன்ங்களின் சம்ஹாரம் நடந்தது

பழநி மலைக்கோயிலில் நவ.4 முதல் நவ.,10 வரை கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. நவ., 4ல் காப்புக் கட்டுதல் விழா துவங்கியது. பழநி மலைக்கோயில் பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை, பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை, பகல் 2:45 மணிக்கு மேல் மலை கோயிலில் வேல் வாங்குதல் நடைபெற்றது. அதன்பின் சன்னதி திருகாப்பிடப்படபட்டு, மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி புறப்பட்டு கிரிவீதி வந்தடைந்தார். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி மங்கம்மாள் மண்டபம் வந்தடைந்தார்.

சூரஷம் ஹாரம் : இன்று காலையில் பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து நான்கு சூரன்களும் கிரிவீதி கொண்டுவரப்பட்டது. கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் முருகனுக்கு தண்டு விரதம் முடித்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு மேல் நான்கு கிரிவீதிகளிலும், வடக்கே தாரகாசுரன், கிழக்கே பானுகோபன், தெற்கே சிங்கமுகாசுரன், வடக்கே சூரபத்மன் முத்துக்குமாரசுவாமியால் வதம் செய்யப்பட்டனர். இரவு 9:00 மேல் கோயில் சார்பாக வெற்றி விழா நடைபெற்றது. மலைக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு ராக்கால பூஜை நடந்தது.

பாதுகாப்பு : சூரசம்ஹார நிகழ்வுக்கு கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தது. 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி தலைமையில் பணிபுரிந்தனர்.

திருக்கல்யாணம் : நாளை (நவ.,10) காலை 9.00மணிக்கு மேல் 10:30 மணிவரை மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பகல் 12:30 பின் வழக்கம்போல் மலைக் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 6.30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வும், திருக்கல்யாண நிகழ்வும் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar