சோழவந்தான்: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் அக்ரஹாரத்தில் ஸ்ரீ ஞானானந்த பாரதீ சுவாமிகள் 132வது ஜெயந்தி விழா ஜெயந்தி விழா நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிகளின் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், பூர்வக ஏகாதச ருத்ர பாராயணம் மற்றும் தீபாராதனை நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ ஞானானந்த பாரதீ க்ரந்த ப்ரகாசன சமிதி நிர்வாகிகள் செய்தனர்.