பதிவு செய்த நாள்
12
நவ
2021
02:11
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கஸ்பா அத்திக்கோம்பை ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மகா காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் தேவதா அனுக்கை, மங்கள விநாயகர் பூஜை, புண்ணியாஹவாசனம், கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி, தீர்த்ம் மற்றும் முளைப்பாரி அழைத்தல், வாஸ்து சாந்தி கும்ப யாகசாலை பிரவேசம், மூலமந்திர ஹோமம், விமான கலசம், யந்திர பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜை, விநாயகர் வழிபாடு, கும்பம் புறப்பாடு நடந்தது. இதனைத்தொடர்ந்து செல்வ விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில் கலசங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் வேதாந்த தேசிகன் பட்டாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.