பதிவு செய்த நாள்
13
நவ
2021
03:11
சென்னை:தமிழகத்தில் தலமரக் கன்று நடும் திட்டத்தின் கீழ் இதுவரை, 2,727 கோயில்களில் 50 ஆயிரத்து 453 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம், சென்னையில் துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள கோயில்களில், அந்தந்த கோயில் தல மரங்களான மா, புன்னை, வில்வம், செண்பகம், மருதம், நாவல், சந்தனம், மகாக்கனி, இலுப்பை கொய்யா, மகிழம் போன்ற மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 2,727 கோயில்களில், இதுவரை 50 ஆயிரத்து 453 தலமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.