பதிவு செய்த நாள்
13
நவ
2021
03:11
பெங்களூரு : கொரோனாவால் கோவில்களின் வருவாய் குறைந்திருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவாயும் ஏறுமுகமாக உள்ளது.
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் காடி சுப்ரமண்யர் கோவில், நெலமங்களாவின் சிவகங்கை கோவில், கர்நாடக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஏ பிரிவு கோவில்களாகும். லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும்.கொரோனா பரவலை தடுக்க, மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்தன.அதன்பின் திறக்கப்பட்டன
என்றாலும், கொரோனா பீதியாலும், கடும் கட்டுப்பாடுகளாலும், பக்தர்கள் வருகை குறைந்தது.தற்போது தொற்று கட்டுக்குள் வந்ததால் அனைத்து விதிமுறைகளையும் அரசு நீக்கியுள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களாக தசரா, தீபாவளி நேரத்தில், காடி சுப்ரமண்யா, சிவகங்கை கோவில்களுக்கு பக்தர்கள் பெருமளவில் வந்தனர். வருவாயும் அதிகரிக்கிறது. எதிர் வரும் நாட்களில் வருவாய் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் கோவில்களுக்கு, புதிய களை வந்துள்ளது. பரபரப்பாக காணப்படுகிறது. கோவில்கள் அருகில், பூ, பழம், பூஜை பொருட்களை விற்று வாழ்க்கை நடத்துவோருக்கும் ஓரளவு வருவாய் கிடைக்கிறது.