பதிவு செய்த நாள்
13
நவ
2021
05:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழாவின் நான்காம் நாளான இன்று காலை உற்சவத்தில், விநாயகர் மற்றும் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 10ல், கொடியேற்றத்துடன் தொடங்கி, இன்று நான்காம் நாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, காலை உற்சவத்தில், விநாயகர் மற்றும் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.