பதிவு செய்த நாள்
13
நவ
2021
05:11
புதுச்சேரி : புதுச்சேரி மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், இன்று 13ம் தேதி குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது. நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், இன்று 13ம் தேதி மாலை 6:21 மணிக்கு, மகரராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள 12 அடி உயர குரு பகவானுக்குசிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேத்தியம், 30 விதமான அபிஷேகம் நடைபெற்றது. காலை 10:00 மணி முதல் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. அதில், குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணா மூர்த்தி ஹோமம் நடைபெற்றது. மகா பூர்ணாஹூதிக்கு பிறகு, ராசி பரிகார ஹோமம், 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. மாலை 3:00 மணிக்கு கலச அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்துள்ளனர்.