* உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. * நீ அனுபவிக்க போவதை கடவுளுக்கு சமர்ப்பித்த பிறகே பயன்படுத்து. * பிறர் உன்னை துன்பப்படுத்தினால் பொறுத்துக் கொள். இல்லையென்றால் விலகிவிடு. * உனது மனமே கடவுள் வாழும் இடமாகும். * எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபடாதே. * உடம்புடன் சேர்த்து உள்ளமும் துாய்மையாக இருக்க வேண்டும். * கடவுளின் திருவடியை எப்போதும் நினை. * காந்தத்தில் ஒட்டும் ஊசி போல ஆழ்ந்த பக்தியில் ஈடுபடு. * கடவுள் எல்லோரிடமும் கருணையே காட்டுகிறார். * ஆழமான பக்தி இருந்தால் பகைவன் மீதும் அன்பு செலுத்தலாம். * நல்லதை செய். கடவுள் கைவிட மாட்டார். * கஷ்டத்தை எண்ணி கலங்காதே. * மகிழ்ச்சி என்பது மனதைப் பொறுத்தது. * பிறர் செய்யும் தவறை அன்பால் திருத்து. * உன் தேவைகள் கூடினால் பிரச்னையும் அதிகரிக்கும். * அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதே. * அளந்து பேசு. பிரச்னை வராது. * நல்லவர்களுடன் நட்பு கொள். மனம் பலம் பெறும். * உன் கோபம் உனக்கு எதிராகவே திரும்பும். * ‘நான்’ என்னும் ஆணவத்தை கைவிடு.