* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள். வெற்றிப்பாதையில் பயணிக்கலாம். * பிறருடன் வீணாக சச்சரவில் ஈடுபடாதே. * மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நல்ல வழியில் செல். * கடவுளின் அருளை நீயே உணர மறுக்கிறாய். * உனக்கு கஷ்டம் வந்தால் அதை கடவுள் கொடுத்த வரமாக கருது. * கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு. * எதிலும் ஆர்வமாக ஈடுபடு. முன்னேற்றம் நிச்சயம் வந்தே தீரும். * தைரியம் இல்லாதவர்களுக்கு வரும் உணர்வே பொறாமை. * தற்பெருமை பேசாதே. அதுவே உன் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும். * கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவதை பற்றி கற்பனை செய்யாதே. * உனக்கு தேவையான அனைத்தும் கடவுளிடம் உள்ளன. * நல்லவர்களுடன் பழகு. அவர்களின் சொற்கள் ஆறுதல் தரும். * குறைவாகப் பேசு. அதுவே நல்லது. * ஆபத்தான சமயத்தில்தான் அமைதி அவசியம். * கடவுளின் அன்பை பெற சுயநலம், சுயபரிதாபம் கொள்ளாதே. * உண்மையான தேவைகள் நிச்சயம் உன்னைத் தேடி வரும். * அமைதியாக இருப்பதைவிட உண்மையை பேசு. * தவறான பாதையில் செல்பவர்களுடன் பழகாதே.