கூடலூர்: கீழக்கூடலூர் சுக்காங்கல்பட்டி மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து மெயின் பஜார், நடுத்தெரு, ரதவீதி உள்ளிட்ட முக்கிய தெருக்களில் ஊர்வலமாக வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.