பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விரத காலத்தை முன்னிட்டு மதியம் நடை சாத்தாமல் கோயில் தொடர்ந்து நடைதிறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரத்தார் கோயிலான கற்பகவிநாயகர் கோயிலில் தினசரி மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலிப்பார். வழக்கமாக மதியம் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைசார்த்தப்பட்டிருக்கும். தற்போது கார்த்திகை ஒன்று முதல் பழனி மற்றும் அய்யப்பன் கோயில் பக்தர்கள் பல மாவட்டங்களிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதை முன்னிட்டு அவர்களின் வசதிக்காக கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனுார் என். கருப்பன்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் சி. சுப்பிரமணியன் அறிவித்துள்ளதாவது.‛ விரத காலமான கார்த்திகை முதல் தைப்பூசம் வரை பக்தர்களின் வசதிக்காக கோயில் நடை காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். மதியம் நடை சார்த்தப்படாது. கொரோனா கட்டுப்பாடு விதிகளின் படி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.’ என்று அறிவித்துள்ளனர்.