Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 21 மாதங்களுக்கு பிறகு ... மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

பதிவு செய்த நாள்

19 நவ
2021
07:11

பழநி: பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா (நவ.13) காப்பு கட்டுதல் உடன் துவங்கியது. தினமும் சண்முகருக்கு அர்ச்சனை, தங்க சப்பரத்தில் சின்ன குமார சுவாமி புறப்பாடு, தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீபம்: (நவ. 18) நேற்று சாயரட்சை பூஜையில் சன்னதியில் பரணி தீபம் ஏற்றுதலும். திருக்கார்த்திகை தினமான இன்று (நவ.,19) பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது. மாலை 4:45 மணிக்கு சின்ன குமாரசாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வந்தார். அதன்பின் தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருளி மாலை 5:30 மணிக்கு பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும், அக்னி லிங்க தரிசனமும், சொக்கப்பனையும் ஏற்றுதலும் நடந்தது. மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில்களில் மகா தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கார்த்திகை திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதி இல்லை. பகல் 2:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படுவர். அதன்பின் மாலை 6:00 மணிக்கு வின்ச், ரோப் கார், படிப்பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வுகள் அனைத்தும் சமூக வலைதளம், கோயில் நிர்வாகத்தால் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar