காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. குன்றக்குடி சண்முகநாதன் பெருமாள் கோயிலில் கார்த்திகை திருநாளையொட்டி நேற்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சண்முகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, சுவாமி மலையில் இருந்து கீழே இறங்கி மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. நேற்றுமாலை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பரணி தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தினார். தொடர்ந்து, குன்றில் குடியிருக்கும் சண்முகநாதப் பெருமான் கோயிலின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகை கொட்டி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தார்.