திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் திருப்பாற்கடலில் கார்த்திகையை முன்னிட்டு கிருத்திகா தீபம் ஏற்றப்பட்டது. இக்கோயில் முன் உள்ள தெப்பக்குளம் திருப்பாற்கடல் என அழைக்கப்படுகிறது. கார்த்திகையை முன்னிட்டு இத்தெப்பகுளத்தில் கிருத்திகா தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். கடந்த 16 ஆண்டாக இக்குளத்தில் நீரின்றி காணப்பட்டதால் வழிபாடு நடக்கவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து மணிமுத்தாறு ஆற்றில் நீர் வரத்து இருந்ததால் தெப்பக்குளம் பெருகியது. இதனால் 16 ஆண்டுக்கு பின் நேற்று இரவு 7:00 மணிக்கு தீர்த்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். அதை தொடர்ந்து திருப்பாற்கடல் தெப்பத்தில் கிருத்திகா தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.