பதிவு செய்த நாள்
20
நவ
2021
03:11
திண்டுக்கல்: திருக்கார்த்திகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் கார்த்திகை தீபம், சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், மேற்கு ரத வீதி லிங்கேஸ்வரர், நாகல் நகர் வரதராஜ பெருமாள், புவனேஸ்வரி அம்மன், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர்.ஆர்.எம்., காலனி வெக்காளியம்மன், சிறுமலை சிவசக்தி சித்தர் பீடம், அகஸ்தியர்புரம் வெள்ளிமலை சிவன், எம்.வி.எம்.,நகர் வெங்கடாஜலபதி கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயிலில் பிரகாரத்திற்குள் சுவாமி, அம்பாள், முருகன் வீதியுலா நடந்தது. மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வீடுகளில் பெண்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.கொடைக்கானல்: குறிஞ்சியாண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜனை நடத்தினர். மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பண்ணைக்காடு முருகன் கோயில் மற்றும் மலைப்பகுதி சிவன் கோயில்களிலும் தீபம் ஏற்றப்பட்டது.சின்னாளபட்டி:- சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கி, யாகசாலை பூஜைகள் நடந்தது. உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.