சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2021 07:11
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் கார்த்திகை திருநாளுக்கு மறுநாள் தீபத் திருவிழா நடக்கும்.வழக்கமாக சுவாமி புறப்பாடு நடந்து தேரடி மைதானத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கும். கொரோனா தொற்று பிரச்னை இருப்பதால் நடப்பாண்டில் ராஜகோபுரம் ராஜகோபுரம் முன்பாக விழா நடந்தது. தீப கம்பத்தில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. விழா ஏற்பாட்டினை செயலாளர் மாலதி, மண்டகப்படிதாரர் டாக்டர் ஜே.சி.சேகர் செய்திருந்தனர்.