ராமேஸ்வரத்தில் பராமரிப்பு இன்றி சிவலிங்கம் சிலைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2021 08:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பராமரிப்பின்றி கிடக்கும் சிவலிங்கம் சிலைகளை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
சிவதீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீராட செல்லும் வழியில், சிவனை நினைவு கூர்ந்து தரிசிக்கும் விதமாக 2ம் பிரகாரம் தெற்கு பகுதியில் 108 சிவலிங்கம் சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ளனர். இச்சிலைக்கு கோயில் நிர்வாகம் எண்ணெய் காப்பு பூசி, மலர்கள் வைத்து பூஜித்தது. கொரோனா ஊரடங்கினால் கடந்த 18 மாதமாக சிலைகளுக்கு எண்ணெய் காப்பு பூசி, மலர்கள் வைத்து பூஜிப்பதை கோயில் நிர்வாகம் கைவிட்டது. இதனால் சிவலிங்க சிலைகள் பராமரிப்பு இன்றி தூசி படிந்து கிடப்பதை கண்டு, பக்தர்கள் வேதனையுடன் செல்கின்றனர்.